Home
Mobile

தலைவன் Realme-க்கு ஒரு கும்பிடு.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (realme P3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ரியல்மி போன் 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் வாங்கிவிட முடியும்.

தலைவன் Realme-க்கு ஒரு கும்பிடு.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி..

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (realme P3x 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400(Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது.

6000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on realme P3x 5G with 50MP Camera in Flipkart sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X