ஆர்டர் போட்ருங்க.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 50MP கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி நார்சோ என்65 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ12,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 1500 கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த அசத்தலான ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ என்65 5ஜி அம்சங்கள் (Realme NARZO N65 5G Specifications): 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன். மேலும் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது . அதேபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக், அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்(Ultra Linear Bottom-ported Speaker) கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ என்65 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ரியல்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








