அசூர விற்பனை.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMLOED டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் விலை குறைப்புடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, ஓம்னிவிஷன் ஓவி20பி சென்சார் கொண்ட 20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான போக்கோ எப்5 5ஜி (POCO F6 5G) ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.
போக்கோ எப்6 5ஜி அம்சங்கள் (POCO F6 5G Specifications): இந்த போக்கோவில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. அதேபோல லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் வருகிறது.

மிட்-ரேஞ்ச் போன்களில் எதிர்பார்க்கப்படும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த மாடலில் வருகிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கும் டிசி டிம்மிங் (DC Dimming) பேனலாகும்.
இதுபோக 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. அல்ட்ரா பிரீமியம் வீடியோ அவுட்புட் கொடுக்க டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது. மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது. இந்த போக்கோவின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு உள்ளது.
இந்த டிஸ்பிளே மற்றும் சிப்செட்டை போலவே கேமரா பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அதாவது, சோனி சென்சார் மற்றும் ஓம்னிவிஷன் சென்சார்களை பேக் செய்துள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. 4K வீடியோ ஷூட் சப்போர்ட் வருகிறது.

20 எம்பி செல்பீ கேமராவும் ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சாருடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் இருக்கிறது.
இந்த போக்கோவின் பேட்டரி சிஸ்டம் பிரீமியமாக இருக்கிறது. 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இருந்தும் வெறும் 7.8 மிமீ தடிமனில் ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. அதேபோல எடையும் வெறும் 179 கிராம் மட்டுமே வருகிறது.
மேலும், மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) வருகிறது.
இந்த போக்கோ எப்6 5ஜி போனை பிளாக் (Black) மற்றும் டைட்டானியம் (Titanium) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 விலை குறைந்து ரூ.27,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கு எந்தவித பேங்க் கார்டுகளும் தேவையில்லை.


Click it and Unblock the Notifications








