Home
Mobile

அமேசான் அதிருது.. வெறும் ரூ.8,749க்கு நோக்கியா போன்.. 50MP கேமரா.. 7ஜிபி ரேம்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் கூட கம்மி விலையில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது சியோமி, விவோ நிறுவனங்களின் 5ஜி போன்களை விட இந்த நோக்கியா ஜி42 5ஜி போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிரபலமான நோக்கியா போனுக்கு அமேசானில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இப்போது பார்ப்போம்.

அமேசான் அதிருது.. வெறும் ரூ.8,749க்கு நோக்கியா போன்.. எந்த மாடல்?

அதாவது அமேசான் தளத்தில் இன்று நோக்கியா சி32 (Nokia C32) ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.8,749 விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்.

6.5-இன்ச் எசிடி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் நோக்கியா சி32 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஆக்டோ-கோர் பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + (3 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைகரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த நோக்கியா சி௩௨ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

அமேசான் அதிருது.. வெறும் ரூ.8,749க்கு நோக்கியா போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் மாடல்.

சார்கோல் (Charcoal), பிரேஸி மிண்ட்(Mint) மற்றும் பீச் பிங்க்(Pink) நிறங்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். குறிப்பாக குறைந்த விலையில் நல்ல 4ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதேபோல் விரைவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Best Mobiles in India

English summary
17 percent discount on Nokia C32 has been announced on Amazon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X