Home
Mobile

பிளிப்கார்ட் தீபாவளி தள்ளுபடி.. 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. கம்மி விலையில் மோட்டோரோலா 5ஜி போன்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போனை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

அதாவது தற்போது 12ஜிபி ரேம் கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி போன் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ1000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் தீபாவளி தள்ளுபடி.. கம்மி விலையில் மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோரோலா ஜி84 5ஜி போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மோட்டோ ஜி84 5ஜி போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போனின வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா ஜி84 5ஜி (MOTOROLA g84 5G) ஸ்மார்ட்போன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

பிளிப்கார்ட் தீபாவளி தள்ளுபடி.. கம்மி விலையில் மோட்டோரோலா 5ஜி போன்..

30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். பின்பு 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 168.3 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
17 percent discount on MOTOROLA g84 5G smartphone on Flipkart: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X