ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. 68W சார்ஜிங்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் big bachat dhamaal sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டோரோலா நிறுவனத்தின் ஒரு அசத்தலான போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலை ரூ.22.999 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகளை பயன்படுத்தி மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனை வாங்கினால் உடனடியாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். இப்போது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Moto Edge 40 Neo Specifications) : ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் வெளிவந்துள்ளது. பின்பு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இதில் உள்ளது.
இதுதவிர ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன்.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். பின்பு இதில் மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








