Home
Mobile

பிச்சிக்குது பிளிப்கார்ட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த போன்?

ஒட்டுமொத்த மோட்டோரோலா பிரியர்களும் மிரளும்படியான தள்ளுபடியில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) போனின் புதிய கலர் வேரியண்ட் விற்பனைக்கு களமிறங்கியிருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற அம்சங்களில் பின்னியெடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த மோட்டோரோலா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த போன்?

அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான மாலி - ஜி610 ஜிபியு (Mali-G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோவில் 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

அதோபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இதுவொரு குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட கேமராவாகும். அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோரோலாவில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அதோடு டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி, வை-பை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி வருகிறது.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water/Dust resistant) கொண்டுள்ளது. இந்த மோட்டோவில் பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது.

அதேபோல, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இந்த போன் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் விதமாக மோட்டோரோலா நிறுவனம், அந்த போனின் பீச் ஃபஸ் (Peach Fuzz) கலர் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய கலரில் அந்த போன் பக்கா பிரீமியமாக இருக்கிறது. இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் அதிரவிடும்படியான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த போனை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.1,150 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.21,849 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. மோட்டோரோலாவில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, நல்ல கேமரா கொண்ட போன் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் வைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on Motorola Edge 40 Neo in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X