மிரளுது விற்பனை.. வெறும் ரூ.8,538 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களின் பட்ஜெட் போன்களை தூக்கி சாப்பிடும்படியான விலையில் 2.5D கர்வ்ட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 1 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் ப்ளூ லுக்கில் வெளியான லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) போனானது, இப்போது நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த லாவாவில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? டிஸ்கவுண்ட் எப்படி?
ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு பக்கா பிரீமியம் லுக் மற்றும் பட்டையை கிளப்பும் பீச்சர்கள் வேண்டுமானால், டாப் லிஸ்டில் இருக்கும் லாவா யுவா 5ஜி போனை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், இந்த போனில் வரும் ஏஐ சப்போர்ட் கொண்ட டூயல் கேமரா சிஸ்டம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் இந்த செக்மெண்ட்டில் எதிர்பார்க்க முடியாதவையாகும்.

லாவா யுவா அம்சங்கள் (Lava Yuva Specifications): இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா-கோர் யுனிசோக் டி750 6என்எம் (Octa-Core Unisoc T750 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
2.5D கர்வ்ட் டிசைனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கிறது. மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜிபி டைனாமிக் ரேம் உள்ளது.
மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த லாவாவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR), நைட் (Night) போன்ற பீச்சர்கள் உள்ளன.

இந்த பட்ஜெட்டிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டைப்-சி (Type-C) சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 9.1 மிமீ தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த லாவாவில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது. இதுவொரு 5ஜி மாடல் என்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த லாவா யுவா 5ஜி போனில் மிஸ்டிக் கிரீன் (Mystic Green) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த போனின் 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,487ஆகவும், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,990ஆகவும் இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.949 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த லாவா யுவா 5ஜி போனை ரூ.8,538 பட்ஜெட்டில் வாங்கலாம். சிட்டி, ஆக்சிஸ் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








