Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி (Blaze Dragon 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையே மலிவாக இருப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்போது, கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா மாடல்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.9,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இப்போது, கேமரா, பேட்டரி, டிஸ்பிளே போன்ற முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் வருகிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), பியூட்டி மோட் (Beauty Mode) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்கிரீன் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

128 ஜிபி ஸ்டோரேஜ் போக 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்த முடியும். 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது.

இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பர்ஃபாமென்ஸ் பக்காவாகவே இருக்கும். அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அனுபவம் கொடுக்கும்.

462 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை டைம் கொடுக்கும்படியான 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஹைபிரிட் சிம் சிலாட் (Hybrid Sim Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடைக்கிறது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் செக்யூரிட்டி கிடைக்கிறது.

டூயல் 4ஜி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. ப்ளூடூத் வி5.1 மற்றும் வை-பை 801 சப்போர்ட் உள்ளது. இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனில் பிரீமியம் லுக் கொடுக்கும் கோல்டன் மிஸ்ட் (Golden Mist), மிட்நைட் மிஸ்ட் (Midnight Mist) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. குளோசி டிசைனில் பேக் பேனல் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on Lava Blaze Dragon 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X