Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. அடிமட்ட ரேட்டுல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதுக்குத்தான காத்துட்டு இருந்தோம், ஆர்டர் போட்டுற வேண்டியதுதான் என்று 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் அடிச்சு புடிச்சு வாங்கும்படியான டிஸ்கவுண்ட்டில் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. டிஸ்பிளோவை போலவே கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களும் பட்ஜெட்டில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனின் விலை என்ன? இப்போது வந்துள்ள டிஸ்கவுண்ட் எவ்வளவு? பீச்சர்கள் எப்படி இருக்கின்றன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் லுக்கில், ஹேண்டி பில்ட் பாடி கொடுக்கும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ இருக்கிறது. வெறும் 7.99 மிமீ தடிமனில் 5500mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இதிலும் லெதர் பேக் பேனலும் கிடைக்கிறது. ஆகவே, பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் பக்கா பிரீமியம் பீல் எதிர்பார்க்கலாம். இப்போது முழு பீச்சர்களை பார்ப்போம்.

பொளக்குது ஆர்டர்.. அடிமட்ட ரேட்டுல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி போன்!

ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): 3டி கர்வ்ட் டிசைனுக்கு (3D Curved Design) ஏற்ப 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஓடிடி பிரியர்கள் விரும்பும்படியான ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கிறது.

மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் பேக் செய்துள்ளது. 1 பில்லியன் கலர் சப்போர்ட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் லோவ் ப்ளூ லைட் சர்டிபிகேஷன் வருவதால், ஐ புரொடெக்சன் எதிர்பார்க்கலாம். வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) இருக்கிறது. ஆகவே, பிரீமியம் அவுட்புட் கிடைக்கும் என்பதில் சந்தேமில்லை.

இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. ரூ.25000 பட்ஜெட்டுக்குள் கிடைப்பதால், மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கும்படி அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

பொளக்குது ஆர்டர்.. அடிமட்ட ரேட்டுல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி போன்!

கேமராவில் வழக்கமான 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. நைட் மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வீடியோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சார் மெயின் கேமராவில் பேக் செய்யப்பட்டுள்ளது. விலாக் பிரியர்களுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்களும் இடம் பெற்றுள்ளன. ஸ்லிம் டிசைனில் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்து கொள்ளலாம். இப்போது விலை விவரங்களை பார்ப்போம்.

இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனின் வெளியீட்டு விலை ரூ.24,998ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1500 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.23,498 விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.23,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. லெதர் பேனலுடன் ஆரஞ்சு கலரில் கிடைக்கிறது. ஒயிட் கலரிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பிரீமியம் மாடலாக இந்த ஐக்யூ போன் இருக்கும்.

Best Mobiles in India

English summary
17 Percent Discount on iQOO Z9s Pro With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X