அசூர விற்பனை.. ரூ.15,901 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்டில் iPhone 15 பிளஸ்.. பிளிப்கார்ட்ல பொளக்குது ஆர்டர்!
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தும் அதிக விலை காரணமாக பக்காவான டிஸ்கவுண்ட் வரட்டும் ஆர்டர் போட்டுக்கலாம் என்று காத்திருந்த கஸ்டமர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. முழுசாக ரூ.15,901 விலை குறைப்பில் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) விற்பனைக்கு கிடைக்கிறது. அடிமட்ட விலையில் ஆர்டருக்கு வருவதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இந்த விலை குறைப்பை பெற எந்தவொரு பேங்க் கார்டுகளும், கூப்பன்களும் தேவையில்லை. நேரடியாக விலைக்கு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபோன் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஆப்பிள் பிரியர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 15 பிளஸ் போனின் 128 ஜிபி மாடலானது, ரூ.89,900 பட்ஜெட்டில் அறிமுகமானது. ஆனால், இப்போது ஐபோன் 16 சீரிஸ் வெளியாகிவிட்டதால், அந்த மாடலின் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இப்போது, ரூ.15,901 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

ஆகவே, ரூ.73,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கிறது. இதற்கு கஸ்டமர்கள் எந்த பேங்க் கார்டுகளையும் பயன்படுத்த வேண்டியது கிடையாது. நேரடியாக ரூ.73,999 பட்ஜெட்டிலேயே ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இப்போது, பீச்சர்களை பார்க்கலாம்.
ஐபோன் 15 பிளஸ் அம்சங்கள் (iPhone 15 Plus Specifications): இந்த போனில் 48 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 2X டெலிபோட்டோ, போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
1080p ரெசொலூஷன் ஸ்லோவ்-மோஷன் ரெக்கார்டிங் மற்றும் 4K ரெசொலூஷன் சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது. இதுபோக 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) வருகிறது. அதேபோல ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா வருகிறது. ஆட்டோபோகஸ் (Autofocus), போகஸ் பிக்சல் (Focus Pixels) உள்ளது.
இந்த கேமராவிலும், 4K வீடியோ ரெக்கார்டிங், 1080p ரெசொலூஷன் ஸ்லோவ்-மோஷன் ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் வருகிறது. கேமராவை போலவே ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (2796 × 1290 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் வருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ16 4என்எம் (Six-Core Bionic A16 4nm) சிப்செட் வருகிறது.
இந்த ஐபோன் 15 பிளஸ் போனில் 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) வருகிறது. பில்ட்-இன் லித்தியம் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியுடன் 7.80 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. 201 கிராம் எடை வருகிறது. IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
அலுமினியன் டிசைனில் கிளாஸ் பேக் பேனலுடன் பிங்க் (Pink), யெல்லோ (Yellow), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஐபோன் மாடல்களை வாங்க வேண்டும் என்று காத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த பிளிப்கார்ட் விற்பனை சரியான நேரமாகும்.


Click it and Unblock the Notifications








