Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.27,000 விலை குறைப்பு.. XDR டிஸ்பிளே.. 48MP கேமரா.. ட்ரூடெப்த் செல்பீ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனையில் (Flipkart Big Shopping Utsav Sale) ஆப்பிள் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் ஓஎல்இடி எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, சிக்ஸ்-கோர் பயோனிக் சிப்செட், சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ட்ரூடெப்த் செல்பீ ஷூட்டர், டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங், மேக்சேப் சார்ஜிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஐபோன் 15 (iPhone 15) போன் கிடைக்கிறது. இந்த போனின் பீச்சர்கள் எப்படி? விலை என்ன? டிஸ்கவுண்ட் எவ்வளவு?

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டால் போதும், அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஈ-காமர்ஸ் தளங்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் பிரியர்களை தட்டித் தூக்கும்படி பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனையில் ஐபோன்கள் அதிகப்படியான டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன. ரூ.79,900 பட்ஜெட்டில் வெளியான ஐபோன் 15 மாடலானது, இப்போது ரூ.52,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.27000 விலை குறைப்பு.. XDR டிஸ்பிளே.. 48MP கேமரா!

இந்த விலையில் வாங்க பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற வேண்டும். அதாவது, ஐபோன் 15 போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.57,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெறலாம். பழைய மொபைல்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், கூடுதலாக ரூ.2000 போனஸ் கிடைக்கும்.

அதாவது, பழைய மாடல்களுக்கான விலை போக, கூடுதலாக ரூ.2000 கிடைக்கும். ஆகவே, ரூ.52,999 பட்ஜெட்டில் இந்த ஐபோன் 15 மாடலை வாங்கி கொள்ளலாம். இது ரூ.79,900 பட்ஜெட்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.27,000 விலை குறைவாகும். இதனால், ஆர்டர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்கள் எப்படி பேக் செய்யப்பட்டுள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): இந்த போனில் ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ16 4என்எம் (Six-Core Bionic A16 4nm) சிப்செட் வருகிறது. 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) மற்றும் 5 கோர் ஜிபியு (5-Core GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 128ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 256ஜிபி மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.

6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்ட சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1600 பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் பீக் அவுட்டோர் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் உள்ளது.

இந்த ஐபோன் 15 போனில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-Shift Optical Image Stabilisation), 2X டெலிபோட்டோ, போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) கொண்ட 48 எம்பி வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. மேலும், ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது. அதேபோல 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா உள்ளது. இதில் ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் பிக்சஸ் போகஸ் (Focus Pixels) கிடைக்கிறது. இந்த போனில் 15W மேக்சேப் சார்ஜிங் வருகிறது. மேலும், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on iPhone 15 in Flipkart Big Shopping Utsav Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X