அடிமட்ட ரேஞ்சுக்கு விலை குறைப்பு.. திடீர்னு iPhone 15 ஆர்டர் அள்ளுது.. மரண பயத்தை காமிச்ச OnePlus 12!
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை (ஜனவரி 30 ஆம் தேதி) தொடங்கியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 2023 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மீது நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும், ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை (ரூ.79,900) விட மிகவும் மலிவான விலைக்கு ஒன்பிளஸ் 12 வாங்க கிடைக்கிறது. இதற்கிடையில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது 17% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதன்கீழ் ஐபோன் 15-ன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.79,999 க்கு பதிலாக ரூ.65,999 க்கு வாங்க முடியும். அதாவது உங்களுக்கு ரூ.13901 தள்ளுபடி கிடைக்கும். ஒன்பிளஸ் 12 மீதும் சில விற்பனை சலுகைகள் (Sale Offers) அறிவிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) இணையதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் மொபைல் ஆப் மற்றும் இ-காமர்ஸ் தளமான அமேசான் ஆகியவற்றின் வழியாக வாங்க கிடைக்கிறது. ஆஃப்லைன் விற்பனையை பொறுத்தவரை ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக கிடைக்கும்.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை வாங்க ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளை (ICICI Credit Cards) அல்லது ஒன்கார்டு-ஐ (OneCard) பயன்படுத்தினால் ரூ.2,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். மேலும் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பமும் கிடைக்கும். மேலும் டிரேட்-இன் டீல்களின் வழியாக ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் இ-ஸ்டோர், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் ஆக்ஸிடென்டல் டேமேஜ் ப்ரொடெக்ஷன் பிளான் (Accidental Damage Protection Plan) மீது 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து கேஸ்களில் (Cases) 20 சதவீதம் தள்ளுபடி, வயர்லெஸ் சார்ஜருக்கு (Wireless Charger) 10 சதவீதம் தள்ளுபடி, ரெட் கேபிள் கிளப் மெம்பர்களுக்கு (Red Club Members) ரூ.1,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது வழக்கமான நாட்ச் டிசைனுக்கு பதிலாக ஐபோன் 14 ப்ரோ பயனர்களிடையே மிகவும் பிரபமான அம்சங்களில் ஒன்றாக கருத்தப்படும் டைனமிக் ஐலேண்ட் நாட்சை (Dynamic Island Notch) கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்ட ஐபோன் 14 மாடலை விட, ஐபோன் 15 மாடலின் கேமரா செட்டப் ஆனது பெரிய அளவிலான முன்னேற்றங்களை பெற்றுள்ளது. ஐபோன் 15-ல் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா சென்சார் உள்ளது. கூடவே இது நீடிக்கப்பட்ட பேட்டரியையும் கொண்டுள்ளது.
ஐபோன் 15 ஆனது 20 மணிநேரம் வரை வீடியோ பிளேவை வழங்குகிறது மற்றும் 16 மணிநேரம் வரை வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 மணிநேரம் வரை ஆடியோ பிளேவை வழங்கும். கடைசியாக இது சக்திவாய்ந்த சிப்செட் ஆன ஏ16 பயோனிக் சிப் (A16 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது. இதே சிப் தான் ஐபோன் 14 சீரீஸ் ப்ரோ மாடல்களிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications








