Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 108MP கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் super value days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

108MP கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?

எனவே ரூ.21,999 இருந்தால் போதும் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். மேலும் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி அம்சங்கள்: ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் கொண்டு இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மூலம் இயங்குகிறது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி மாடல். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா +13 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த கேமராவில் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

108MP கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?

மேலும் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது அதேபோல் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) ஆகியவை இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. மேலும் கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC), வை-பை 8 (Wi-Fi 8) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 percent discount on Infinix Zero 30 5G smartphone on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X