எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் vs சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க்-ஒப்பீடு

By Super
|
எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் vs சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க்-ஒப்பீடு
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் எல்ஜி, சோனி எரிக்ஸன் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றையொன்று விஞ்சும் அளவுக்கு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில், எல்ஜியின் ஆப்டிமஸ் 2எக்ஸ் மற்றும் சோனி எரிக்ஸன் எக்ஸபீரியா ஆர்க் ஆகிய போன்களின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை பார்க்கலாம்.

இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இதில், எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் போன் ஆன்ட்ராய்டு வி2.2 வெர்ஷன் கொண்டதாகவும், எக்ஸ்பீரியா ஆர்க் வி.2.3 வெர்ஷன் ஆன்ட்ராய்டிலும் இயங்குகின்றன.

சோனி எக்ஸ்பீரியா ஆர்க் போன் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்ப்பியான் பிராசஸரை கொண்டிருக்கிறது. ஆனால், எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் ஆற்றல் நிறைந்த டூவல் கோர் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டுள்ளது.

இரண்டு போன்களிலும் ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இரண்டும் ஒரே மெகாபிக்செல் கேமரா என்றாலும், எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் கேமரா ஆற்றல்வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், 1.3மெகாபிக்செல் முகப்பு கேமராவும் இருக்கிறது. சோனி எக்பீரியா ஆர்க்கில் முகப்பு கேமரா இல்லாதது மிகப்பெரிய குறை.

தவிர, எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் கேமரா 1080 பி ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் வசதியை தருகிறது. ஆனால், சோனி எக்ஸ்பீரியாவின் கேமரா 720பி ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங்கில் இயங்குகிறது.

எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் போனில் 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், வைஃபை இணைப்பு வசதிகள் இருக்கின்றன. கேண்டிபார் வடிவமைப்புடன் கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீனையும் பெற்றுள்ளது. இது 8 ஜிபி வரை இன்பில்ட் சேமிப்பு திறனையும் கொண்டிருக்கிறது. ஆனால், சோனி எரிக்ஸன் எக்ஸபீரியாவில் 512எம்பி இன்பில்ட சேமிப்பை மட்டும் வழங்கும். ஆனால், இரண்டு போன்களின் சேமிப்பு திறனையும் 32ஜிபி வரை கூட்டிக்கொள்ள முடியும்.

எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,450 விலையிலும், சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் ரூ.26,000 விலையிலும் வந்துள்ளது. இந்த இரண்டு போன்களில் வசதிகள் மற்றும் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் நிறைவான போனாக தோன்றுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X