அமெரிக்காவில் 11 மணிநேரம் காத்திருந்து ஐபோன் வாங்கிய வாடிக்கையாளர்கள்

இதில் உள்ள நிறைய உயர்ந்த தொழில் நுட்பங்கள் மக்களை வெகுகாகக் கவர்ந்திருக்கிறது. சிறந்த கேமரா, புதிய ஆன்டெனா, வாய்ஸ் அசஸ்மென்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள சிரி என்ற புதிய தொழில் நுட்பம், வாய்ஸ் கமென்ட் போன்ற கூடுதல் தொழில் நுட்ப வசதிகளுடன் வந்துள்ளது.
இது போன், மொபைல் உலகில் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. ஒட்டுமொத்த மக்களையும் தன்வசம் ஈர்த்துவிட்டது. ஏனென்றால் முதல் 24 மணி நேரத்திலேயே 1 மில்லியன் ஐபோன்-4எஸ் மொபைல்கள் விற்றுவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன்-4 ஸ்மாட்ர்போன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் 6 லட்சம் ப்ரீ ஆர்டரை குவித்தது. ஆனால், இந்த சாதனையை ஆப்பிள் ஐபோன்-4எஸ் விஞ்சிவிட்டது.
எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்ற தகவலால் ஐபோன்-4எஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை கடுமையாக குறைந்தது. ஆனால், புதிய ஐபோன்-4எஸ் மாடல் முதல் நாளில் புக்கிங்கில் 1 மில்லியனை கடந்த செய்தி வெளியானதும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை மீண்டும் எகிறின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட ஐபோன்களில் 3ஜி தொழில் நுட்பத்தில் சில பிரச்னைகள் இருந்தன. ஆனால் இந்த முறை வெளியான ஆப்பிள் ஐபோன் 4எஸ் மொபைலில் இது போன்ற எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை.
இதனால், ஐபோன்-4எஸ் போனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை. அதிக அளவில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து மொபைலை வாங்கிய வண்ணம் தான் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications