Home
Mobile

உயர்ந்த தொழில் நுட்பம் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்

By Super
உயர்ந்த தொழில் நுட்பம் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்
அமேஸ் மற்றும் நெக்சஸ் பிரைம் என்ற இரண்டு ஸ்மார்ட் மொபைல்களை விற்பனைக்குத் தந்துள்ளது எச்டிசி மற்றும் கூகுள் நிறுவனங்கள்.

எச்டிசி அமேஸ் மொபைல் 172.9 கிராம் எடை கொண்டது. 4.3 இஞ்ச் திரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மல்டி டச் இன்புட் வசதியையும், ஆக்சிலரோமீட்டர் சென்சார் வசதியையும் இந்த மொபைல் வழங்குகிறது. கூகுள் நெக்சஸ் பிரைம் மொபைல் 4.5 இஞ்ச் அமோல்ட் திரை வசதி கொண்டது.

அமேஸ் மொபைல் 2.3 ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகின்றது. இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் சிபியு பொருத்தப்பட்டுள்ளது.

கூகுள் நெக்சஸ் பிரைம் மொபைல் டியூவல் கோர் டெக்சாஸ் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் சிபியூ கொண்டது. இந்த மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. எச்டிசி மொபைலில் 8 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு மொபைல்களிலுமே பவர்ஃபுல் எல்ஐ-அயான் எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நீடித்து உழைக்கும் பேட்டரியினால் அதிக நேரம் தொடர்ந்து பேச முடியும். இந்த இரண்டு மொபைலுமே 3ஜி மற்றும் வைபை வசதியினைக் கொடுக்கிறது.

இதன் மூலம் பொழுது போக்கு அம்சமாக ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், ஸ்டீரியோ எஃப்எம் ரேடியோ போன்ற வசதிகளையும் பெற முடியும்.

எச்டிசி அமேஸ் ஸ்மார்ட் மொபைல் ரூ.33,900 விலையில் கூகுள் நெக்சஸ் ரூ.33,250 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X