Home
Mobile

முதல்ல நம்ப மாட்டீங்க.. அப்புறம் மார்ச் 27 வரை தானா வெயிட் பண்ணுவீங்க.. வெறும் ரூ.10000 க்கு 16GB RAM போன்!

வெறும் ரூ.10,000 க்கு 16ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் என்றதுமே.. "கம்பி கட்டுற கதைகளில்" ஒன்றென நீங்கள் நினைத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், 8ஜிபி ரேம் உடன் ஸ்மார்ட்போன்களே ரூ.15,000 பட்ஜெட்டில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதை நாங்களும் அறிவோம்!

இருப்பினும், உண்மையாகவே வருகிற மார்ச் 27 ஆம் தேதியன்று ரூ.10,000 க்கு 16ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதில் 16ஜிபி ரேம்-ஐ தவிர்த்து வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வாருங்கள் விவரங்கள் பார்க்கலாம்:

ரூ.10000 க்கு 16GB RAM போன்.. Infinix Hot 30i மார்ச் 27ல் அறிமுகம்!

அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ (Infinix Hot 30i) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சீனாவை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் "ஸ்மார்ட்போன் கா பாப்" (Smartphone Ka Baap) அதாவது ஸ்மார்ட்போன்களின் தந்தை என்கிற டேக்லைனின் கீழ் ஹட் 30ஐ ஸ்மார்ட்போனைஇந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

16ஜிபி ரேம் எப்படி சாத்தியம்? முன்னரே குறிப்பிட்டபடி, இது மொத்தம் 16ஜிபி அளவிலான ரேம் உடன் வருகிறது. அதாவது 8ஜிபி அளவிலான பிஸிக்கல் ரேம்-ஐயும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐயும் கொண்டிருக்கும். அறியதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்றால் ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ கடனாக பெற்றுக்கொள்ளும் ஒரு அம்சமாகும்.

விலையை மீறிய ப்ரீமியம் லுக்! 16ஜிபி வரையிலான ரேம்-ஐ தவிர்த்து, இது டூயல ரியர் கேமரா செட்டப்புடன் வரும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சுவாரசியமாக இதன் ரியர் கேமரா செட்டப்பில் உள்ள ஒவ்வொரு லென்ஸுக்கும் தனித்தனி சர்க்குலர் மாட்யூல்கள் (Circular Modules) உள்ளது; உடன் எல்இடி ஃபிளாஷும் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து இந்த போனிற்கு பிரீமியம் லுக்கை வழங்குகின்றன.

வடிவமைப்பு தொடர்பான மற்ற விஷயங்களை பொறுத்தவரை, குறைந்தபட்சம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனானது லெதர் ஃபினிஷ் (Leather Finish) உடன் வரும். மேலும் இது டைனமிக் டிசைன் கிளாஸ் வேரியண்டிலும் (Dynamic Design Glass Variant) கிடைக்குமென்று கூறப்படுகிறது.

டிஸ்பிளே மற்றும் ப்ராசஸர்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான 16ஜிபி ரேம் (16GB RAM) உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி37 (MediaTek Helio G37) சிப்செட் மூலம் இயக்கப்படும்.

ரியர் மற்றும் செல்பீ கேமரா: கேமராக்களை பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை சென்சார் பற்றிய தகவல் இல்லை; முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

பேட்டரி: இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரியை கொண்டிருக்குமென்றும், அது யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
16GB RAM Phone For Just Rs 10000 Check Infinix Hot 30i Key Specifications Which Launch on March 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X