Home
Mobile

இது போன் இல்ல புரட்சி.. 16GB ரேம், 1TB மெமரி, 5 கேமரா.. OnePlus-ன் புதிய Apex Edition போன்.. என்ன விலை?

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) தொடங்கி.. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) வரையிலாக இந்த ஆண்டு மட்டுமே இந்தியாவில் பல புதிய ஒன்பிளஸ் மாடல்கள் அறிமுகமாகி விட்ட நிலையில்.. ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) என்கிற புதிய மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.

ஆகஸ்ட் 7 நடக்கும் இந்திய அறிமுகத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இது விற்பனைக்கும் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்திய டீசரின்படி, இந்த ஸ்பெஷல் எடிஷனில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் இடம்பெறும். இது முன்னதாக அறிமுகமான ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

16GB  ரேம், 1TB ஸ்டோரேஜ், 5 கேமரா..OnePlus-ன் புதிய Apex Edition போன்!

ரேம் மற்றும் ஸ்டோரேஜிற்கு அப்பால், அபெக்ஸ் எடிஷன் ஆனது அதன் "முன்னோடி" ஆன ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஒப்பன் ஸ்மார்ட்போனில் உள்ள அதே முக்கிய அம்சங்களை தக்க வைத்துகொள்ளும். அதாவது பிரீமியம் வீகன் லெதர் பினிஷ், கிரிம்சன் ரெட் கலர், அலெர்ட் ஸ்லைடரில் வைரம் போன்ற வடிவம் மற்றும் ஆரஞ்சு நிற அசென்ட்கள் போன்ற மாற்றங்களை தவிர்த்து இது ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஒப்பனை போலவே தான் இருக்கும்!

இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய மாற்றமும் உள்ளது, அபெக்ஸ் எடிஷன் ஆனது 3 வருட ஓஎஸ் மேம்படுத்தல்களை பெறும் என்று கூறப்படுகிறது . ஆனால் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது 4 வருட ஓஎஸ் மேம்படுத்தல்களை பெறும் என்கிற வாக்குறுதியை கொண்டுள்ளது. ஒருவேளை புதிய அபெக்ஸ் எடிஷன் ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் அனுப்படலாம். ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 13 உடன் அனுப்பப்பட்டது; இப்போது ஆண்ட்ராய்டு 14 க்கு மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் என்ன விலைக்கு வரும்? சரியான விலை நிர்ணயம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று நடக்கும் வெளியீட்டின் போது தான் அறிவிக்கப்படும். இருப்பினும் இது நிச்சயம் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பனை விட விலை அதிகமாகவே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஓப்பன் தற்போது ரூ.1,39,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆக அபெக்ஸ் எடிஷன் ரூ.1,45,000 - ரூ.1,50.000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட் உடனான 7.82-இன்ச் AMOLED இன்னர் டிஸ்பிளே, 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் AMOLED அவுட்டர் டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
16GB RAM 1TB Stroage Confirmed in OnePlus Open Apex Edition Ahead India Launch on Aug 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X