மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.18,499-க்கு லெதர் வேரியண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
லெதர் பேனல், அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, 44W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரூ.1,500 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையில் சக்கைப்போடு போட்டுவருகிறது, விவோ ஒய்200இ (Vivo Y200e) 5ஜி போன். இதுகுறித்த விவரம் இதோ.
லெதர் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் டிசைன் மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் இந்த விவோ ஒய்200இ 5ஜி போன் மிரளவிடுகிறது. சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்டிருக்கின்றன. இதன் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (Vivo Y200e 5G Specifications): இந்த விவோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile Platform) சிப் மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொடுக்கப்பட்டுள்ளது.
கேமிங் மட்டுமல்லாமல், டிஸ்பிளே அனுபவமும் பக்கா அவுட்புட் கொடுப்பதற்காக அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்சள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளே வருகிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதேபோல
8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொண்ட மற்றொரு வேரியண்ட் இருக்கிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் வருகிறது. ஃபிளிக்கர் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் +2 எம்பி பொக்கெ + ஃபிளிக்கர் இருக்கிறது.
போர்ட்ராய்டு (Portrait), பிளாக் & கோல்டு (Black & Gold), சைபர்பன்க் (Cyberpuck), நைட் பில்டர்கள் (Night Filters) பீச்சர்கள் உள்ளன. இதே பீச்சர்களை கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) உள்ளன.
லெதர் பேனல் கொண்ட சஃப்ரான் டிலைட் (Saffron Delight) கலரில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல பிளாக் டயமன்ட் (Black Diamond) கலரும் கிடைக்கிறது. இந்த விவோவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, தள்ளுபடியில் விற்பனையாகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் எச்டிஎப்சி, எஸ்பிஐ வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த விவோ ஒய்200இ 5ஜி போனை வெறும் ரூ.18,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். நல்ல பர்ஃபாமென்ஸ் கொண்ட லெதர் பேனல் போன் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








