வெளுக்குது விற்பனை.. ரூ.20000 விலை குறைப்பு.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் போனை நம்ப முடியாத விலை குறைப்பில் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது. ரூ.79,999 பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) போனானது, இப்போது ரூ.59,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், 4000mAh பேட்டரி, ஆப்டிகல் ஜூமிங் மற்றும் கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் பிரீமியமாக வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): இந்த சாம்சங் போனில் 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Infinity-O Dynamic AMOLED 2X) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 1 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. சாம்சங்கின் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கொண்ட டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 (Deca-Core Samsung Exynos 2400) சிப்செட் வருகிறது. எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் உள்ளது.
ஆகவே, லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல கேமிங் பிரியர்களுக்கும் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது. பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி உள்ளது.
3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. ஹேண்டி டிசைனில் காம்பாக்ட் பாடி கொண்டிருக்கிறது. ஆகவே, 7.6 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனில் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது. லைவ் டிரான்ஸ்லேட், சாட் அசிஸ்ட், நோட் அசிஸ்ட், சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற ஏஐ பீச்சர்களை உள்ளது.
ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), மார்பிள் கிரே (Marble Gray), கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் அம்பர் எல்லோ (Amber Yellow) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் அறிமுகமான போது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.79,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.62,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த பேங்க் டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனை வெறும் ரூ.59,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications