மிரளும் டிஸ்கவுண்ட்.. சாம்சங் போனுக்கு ரூ.4500 கட்.. 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களே வியக்கும்படி சாம்சங் கேலக்ஸி எப் 54 (Samsung Galaxy F54) போனுக்கு முழுதாக ரூ.4,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 108எம்பி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட இந்த போனின் முழு விவரம் இதோ.
சாம்சங் நிறுவனத்தின் போன்களில் கொடுக்கப்படும் கேமரா அம்சங்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு கிரிஸ்டல் கிளியர் போட்டோக்களை கொடுக்கக்கூடியது. இதனாலேயே ஆப்பிள் போன்களுக்கு அடுத்தப்படியாக சாம்சங் மாடல்களில் கேமராவுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. இருப்பினும், 108 எம்பி கேமரா கொண்ட மாடல்களின் விலை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.

ஆனால், இப்போது, பட்டையை கிளப்பும் கேமரா கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எப் 54 மாடல் மிட்-ரேஞ்ச் விலையை விட கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது முழுக்க முழுக்க பிளிப்கார்ட் ஆஃபரில் மட்டுமே கிடைப்பதால், விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த போனின் அம்சங்கள், ஆஃபர் விவரங்கள் பின்வருமாறு.
சாம்சங் கேலக்ஸி எப் 54 அம்சங்கள் (Samsung Galaxy F54 Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1380 (Octa-Core Exynos 1380) சிப்செட் வருகிறது. அதோடு சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் (Samsung One UI 5.1) மற்றும் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த சாம்சங் மாடலில் 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Plus Infinity-O Display) மாடலாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் வருகிறது.
இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது.
அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் எப்54 மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் பேக்கப் கொடுக்கக்கூடியது. இதற்கு டைப் - சி சார்ஜிங் வருகிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல டைப் - சி ஆடியோ (Type - C Audio), பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), நேவ்ஐசி (NavIC), என்ஃஎப்சி (NFC) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போன் மீடியர் ப்ளூ (Meteor Blue) மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் (Stardust Silver) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.29,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது. இந்த விலையில் பிரம்மாண்ட சலுகையை பிளிப்கார்ட் (Flipkart) அறிவித்துள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப் 54 போனை ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால், முழுதாக ரூ.4,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.27,550 மதிப்பில், எக்ஸ்சேஞ்ச் போனல் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.25,499க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








