Home
Mobile

வெளுத்து கட்டுது ஆர்டர்.. வெறும் ரூ.6000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் லாவா ஃபெஸ்டிவ் சீசன் விற்பனையை (Lava Festive Season Sale) முன்னிட்டு லாவா போன்களுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.6000 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம், டிரிபிள் ரியர் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள லாவா யுவா 3 (Lava Yuva 3) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த லாவா போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லாவா யுவா 3 அம்சங்கள் (Lava Yuva 3 Specifications): இந்த லாவா போனில் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.6000 பட்ஜெட்ல 8GB ரேம்.. எந்த மாடல்?

பஞ்ச்-ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போனின் கேமராவை பார்க்கையில், 13 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் + விஜிஏ (VGA) கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த கேமராவில் பியூட்டி மோட் (Beauty Mode), நைட் மோட் (Night Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ மோட் (AI Mode), ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் பனோரமா (Panorama) உள்ளிட்ட பல்வேறு கேமரா பீச்சர்களை பேக் செய்துள்ளது.

மேலும், இந்த பட்ஜெட்டிலும் ஸ்லோவ் மேஷன் (Slow Motion) மற்றும் டைம்லேப்ஸ் (Timelapse) பீச்சர்கள் வருகின்றன. இந்த லாவா யுவா 3 போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.

மேலும், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 8.45 மிமீ தடிமன் மற்றும் 192 எடை கொண்டிருக்கிறது. இந்த லாவா யுவா 3 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 151 நிமிடங்களில் ஃபுஸ் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

270 மணி நேரங்களுக்கு ஸ்டான்பை பேக்கப் கொடுக்கும். இதுவொரு பட்ஜெட் மாடலாகும். ஆகவே, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. அதேபோல 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி வருகிறது.

மேலும், ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் உள்ளது. இந்த லாவா போனை எலிப்ஸ் பிளாக் (Eclipse Black), காஸ்மிக் லாவண்டர் (Cosmic Lavender) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,799ஆகவும் இருக்கிறது.

அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,299ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் லாவா ஃபெஸ்டிவ் சீசன் விற்பனையை (Lava Festive Season Sale) முன்னிட்டு, 128 ஜிபி மாடலானது, ரூ.6,699-க்கு கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.669 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
16 Percent Discount on Lava Yuva 3 With 4GB RAM 5000mAh Battery Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X