Home
Mobile

அடிச்சு தூக்குது விற்பனை.. வெறும் ரூ.14,249 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, 12 ஜிபி ரேம், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,000 விலை குறைப்பு போக ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக ரூ.750 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அடிச்சு தூக்குது விற்பனை.. வெறும் ரூ.14,249 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே!

லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Lava Blaze X 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் (Android 15 OS Update) உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. பட்ஜெட்டில் வரும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. சோனி சென்சார் (SONY Sensor) கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த டூயல் ரியர் கேமராவில் ப்ரோ வீடியோ (Pro Video), அல்ட்ரா எச்டி (UHD), டூயல் வியூ வீடியோ (Dual View Video), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. இதிலும் ப்யூட்டி (Beauty), எச்டிஆர் (HDR) பீச்சர்கள் உள்ளன.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் ஸ்லிம் பாடி கொடுக்கப்படவில்லை. 8.45 எம்எம் தடிமன் வருகிறது. ஆனால், 183 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) ஆகிய கலர்களில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
16 Percent Discount on Lava Blaze X With 6GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X