Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.4000 ரேட் கட்ல 6400mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 6400mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் டெக்னாலஜி கேமரா, 1.5K அமோலெட் டிஸ்பிளே, விசி கூலிங் சிஸ்டம் போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) போனுக்கு நம்ப முடியாத டிஸ்வுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் அதிகப்படியான லாபத்தில் வாங்க முடியும்.

இந்த ஐக்யூ போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.28,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி கொண்ட வேரியண்ட் ரூ.30,999 பட்ஜெட்டிலும் வெளியானது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் நடக்கும் கிரேட் சம்மர் விற்பனையில் ரூ.26,998 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.4000 ரேட் கட்ல 6400mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ரூ.2001 விலை குறைப்பு வருகிறது. இதுபோக ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.24,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மொத்தமாக ரூ.4001 டிஸ்கவுண்ட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. உடனடி பேங்க் டிஸ்கவுண்ட்டை பொறுத்தவரை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது.

இதே கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.2,500 டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான ஸ்போர்ட்டி டிசைனில் ராகிங் ப்ளூ (Raging Blue) கலரில் கிடைக்கிறது. அதேபோல மூன்லைட் டைட்டானியம் (MoonKnight Titanium) கலரிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): இந்த நியோ போனில் கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 1.5K ரெசொலூஷன், 4500 பீக் பிரைட்னஸ் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது. இந்த நியோ மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) வருகிறது. அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) சப்போர்ட் உள்ளது.

90FPS கேமிங் அவுட்புட் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் உள்ளது.

இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 4K ஷூட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6K விசி கூலிங் சேம்பர், பைபாஸ் சார்ஜிங் போன்ற டெக்னாலஜிகளுடன் பெரிய 6400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 55W பிடி சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
16 Percent Discount on iQOO Neo 10R With 8GB RAM in Amazon Great Summer Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X