இன்னைக்கு ஆர்டர் அள்ளுமே.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 30 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனுக்கு தற்போது 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.
எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் ( Infinix HOT 30 5G Specifications): 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2460 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. மேலும் இதில் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
அதேபோல் சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), டூயல் நானோ சிம் போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP53 தர ப்ளாஷ் மற்றும் வாட்டர் ரெஜிஸ்டண்ட், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 14 5ஜி பேண்ட் சப்போர்ட், என்எப்சி பேமெண்ட் வசதி உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








