மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.21999 போதும்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5800mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் டிசைன் கொண்ட ஹானர் எக்ஸ்9பி (HONOR X9b) போன் நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் எக்ஸ்9பி அம்சங்சங்கள் (HONOR X9b Specifications): இந்த போனில் ஆன்டி-டிராப் ரெசிஸ்டன்ஸ் (Anti-Drop Resistance) கொண்ட் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) பேனல் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கட்டிங்-எட்ஜ் குஷனிங் டெக்னாலஜி (Cutting-edge Cushioning Technology) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்ட் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அப்கிரேட் கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் கேமிங் மற்றும் லாக் ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் சிம் (Dual SIM) சிலாட் உள்ளது. எஸ்டி கார்டு (SD Card) சிலாட் கிடையாது. டிஸ்பிளேவை போலவே கேமரா பீச்சர்களும் பக்காவாக இருக்கின்றன.

108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) + 2 எம்பி மேக்ரோ சென்சார் (Macro Sensor) வருகிறது. 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) சப்போர்ட் வருகிறது. அதேபோல 8எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (8x Digital Zoom) மற்றும் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் (3x Lossless Zoom) சப்போர்ட் உள்ளது.
1080P வீடியோ ஷூட்டிங் (Video Shooting) சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 35w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி கொண்டிருந்தும், ஸ்லிம் டிசைனில் 7.98 மிமீ தடிமன் மற்றும் 185 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஹானரில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது.
கிளாசிகல் டூயல் ரிங் டிசைனில் (Classical Dual Ring Design) வேகன் லெதர் பேனல் (Vegan Leather Panel) கொண்ட சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது.
ஆனால், அமேசான் தளத்தில் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டானது, எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.4000 தள்ளுபடியோடு வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications