Home
Mobile

Amazon அதிருது.. ரூ.6000 கட்.. ரூ.19000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் (Amazon Great Freedom Sale) 108 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், லெதர் பேக் பேனல் டிசைனில் வெளியான ஹானர் எக்ஸ்9பி (HONOR X9b) போனுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எந்தவொரு பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் டிஸ்கவுண்ட் பொருந்தும்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் கிரேட் ஃப்ரீடம் விற்பனை தொடங்கி இருக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன் பிரியர்கள் திக்குமுக்காடும்படியான டிஸ்கவுண்ட் வாரி வழங்கப்படுகிறது. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஹானர் எக்ஸ்9பி மாடலுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

Amazon அதிருது.. ரூ.6000 கட்.. ரூ.19000 பட்ஜெட்ல 108MP கேமரா மாடல்!

ஹானர் எக்ஸ்9பி விலை (HONOR X9b Price): இந்த ஹானர் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.6000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, வெறும் ரூ.19,998 பட்ஜெட்டில் இந்த மிட்-ரேஞ்ச் போனை வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.24,698 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. பிளாக் மற்றும் ஆரஞ்ச் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆரஞ்ச் மாடலில் லெதர் பேக் பேனல் வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்கள் வருகிறது?

ஹானர் எக்ஸ்9பி அம்சங்கள் (HONOR X9b Specifications): இந்த ஹானர் மாடலின் டிஸ்பிளேவே ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், ஆன்டி-டிராப் டிஸ்பிளே டிசைன் வருகிறது. 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கொண்ட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சப்போர்ட் உள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்9பி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஆப்ஸ் பர்ஃபாமென்ஸ் மிட்-பிரீமியம் லெவலில் இருக்கும். 8 ஜிபிக்கான டர்போ ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரை வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ரியர் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் வருகிறது.

35W சூப்பர்சார்ஜ் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி சிஸ்டம் வருவதால், பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கும். 185 கிராம் எடை வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் 7.98 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. மேலும், இந்த ஹானர் எக்ஸ்9பி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், 5ஜி கனெக்டிவிட்டி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
16 Percent Discount on HONOR X9b With 108MP Camera in Amazon Great Freedom Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X