அதிர போகுது ஆர்டர்.. ரூ.22,999 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த மாடல்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தனித்துவமான வடிவமைப்பு, 108எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனுக்கு அமேசானில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் (amazon) தளத்தில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே ரூ.22999 விலையில் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். மேலும் ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள் (HONOR X9b 5G Specifications): இதன் போனின் டிஸ்பிளேவில் அல்ட்ரா-பவுன்ஸ் ஆன்டி-ட்ராப் 360-டிகிரி தொழில்நுட்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் (AMOLED display) இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 x 2652 பிக்சல்ஸ், 10-பிட் கலர்ஸ், 1200 நிட்ஸ் பீக் ப்ரைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் MagicOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்9பி 5ஜி போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன். 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். 55ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டிஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் ஹானர் எக்ஸ்9பி 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக பட்ஜெட் விலையில அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வருவதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








