பொசுக்குன்னு சீன கம்பெனியுடன் கூட்டு சேர்ந்த ஜியோ.. 16 போன்களுக்கு மட்டும் ஸ்பெஷல் 5G.. இதோ ஃபுல் லிஸ்ட்!

|

இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றுடன் கூட்டுசேர்ந்து அதன் 12 ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்பெஷல் ஆன 5G நெட்வொர்க்கை வழங்க உள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? ஜியோ எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது? ஸ்பெஷல் 5ஜி என்றால் என்ன? இதோ விவரங்கள்:

ஜியோவின் சீன கூட்டாளி!

ஜியோவின் சீன கூட்டாளி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்பிளஸ் (OnePlus) உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதனிடம் இருக்கும் ஸ்பெஷலான 5ஜி நெட்வொர்க்கை 16 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டு வருகிறது.

இங்கே "ஸ்பெஷல் ஆன 5ஜி நெட்வொர்க்" என்று நாங்கள் குறிப்பிடுவது ஜியோவின் ஸ்டேண்ட்அலோன் 5ஜி (Standalone 5G) நெட்வொர்க்கை தான்!

இந்த ஸ்டேண்ட்அலோன் 5ஜி நெட்வொர்க்கில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த ஸ்பெஷலான 5ஜி நெட்வொர்க்கை பெறப்போகும் 16 ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

ஜியோ ஸ்டேண்ட்அலோன் 5G-யில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜியோ ஸ்டேண்ட்அலோன் 5G-யில் அப்படி என்ன ஸ்பெஷல்?

எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்டேண்ட்அலோன் 5G நெட்வொர்க் ஆனது இந்திய சந்தைக்கு வரும் மற்ற 5ஜி சேவைகளை விட வேகமாக இருக்கும்; சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால் புதிய 5ஜி ரேடியோ அக்செஸ் நெட்வொர்க்கை (5G Radio access network) பயன்படுத்தி ஏற்கனவே உள்ள 4G எLTE நெட்வொர்க் கோரில் 'ஓவர்லெய்ட்' செய்யப்பட்ட 5ஜி ஆனது நான்-ஸ்டேண்ட்அலோன் 5ஜி நெட்வொர்க் (Non-standalone 5G Network) ஆகும் .

அதுவே முற்றிலும் புதிய 5G நெட்வொர்க் கோரின் கீழ் கிடைக்கும் 5ஜி ஆனது ஸ்டேண்ட்அலோன் 5ஜி நெட்வொர்க் (Standalone 5G Network) ஆகும்.

ஜியோவின் இந்த ஸ்டேண்ட்அலோன் 5ஜி எந்தெந்த OnePlus போன்களுக்கு கிடைக்கும்?

ஜியோவின் இந்த ஸ்டேண்ட்அலோன் 5ஜி எந்தெந்த OnePlus போன்களுக்கு கிடைக்கும்?

01. ஒன்பிளஸ் 10 ப்ரோ
02. ஒன்பிளஸ் 10 10ஆர்
03. ஒன்பிளஸ் 10டி
04. ஒன்பிளஸ் 9

05. ஒன்பிளஸ் 9ஆர்
06. ஒன்பிளஸ் 9ஆர்டி
07. ஒன்பிளஸ் 9 ப்ரோ
08. ஒன்பிளஸ் 8

09. ஒன்பிளஸ் 8டி
10. ஒன்பிளஸ் 8 ப்ரோ
11. ஒன்பிளஸ் நோர்ட்
12. ஒன்பிளஸ் நோர்ட் 2T

13. ஒன்பிளஸ் நோர்ட் 2
14. ஒன்பிளஸ் நோர்ட் CE
15. ஒன்பிளஸ் நோர்ட் CE 2
16. ஒன்பிளஸ் நோர்ட் CE 2 லைட்

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஜியோ-ஒன்பிளஸ் கூட்டணியில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது!

ஜியோ-ஒன்பிளஸ் கூட்டணியில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது!

மேற்குறிப்பிட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் என்கிற அறிவிப்பு ஒருபக்கம் இருக்க - புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,800 மதிப்புள்ள கேஷ்பேக் நன்மைகள் கிடைக்கும் என்றும் இந்த கூட்டணி (ஜியோ-ஒன்பிளஸ்) அறிவித்துள்ளது.

இந்த கேஷ்பேக் ஆபர் (Cashback Offer) ஆனது நடந்து கொண்டிருக்கும் ஒன்பிளஸ் ஆண்டு விற்பனையின் (OnePlus Anniversary Sale 2022) போது அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் அணுக கிடைக்கிறது?

எந்தெந்த நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் அணுக கிடைக்கிறது?

- சென்னை
- புது தில்லி
- மும்பை
- வாரணாசி
- கொல்கத்தா
- பெங்களூரு
- ஹைதராபாத்


- நாததுவாரா
- புனே
- குருகிராம்
- நொய்டா
- காசியாபாத்
- ஃபரிதாபாத்
- குஜராத்தின் 33 மாவட்டத் தலைமையகங்கள்.

Best Mobiles in India

English summary
16 OnePlus Smartphones To Get Jio Standalone 5G Network Why SA 5G Is Special Than Others

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X