Home
Mobile

நோக்கியா என்-9 Vs ப்ளாக்பெரி-9900- ஒப்பீட்டு பார்வை

By Super
நோக்கியா என்-9 Vs ப்ளாக்பெரி-9900- ஒப்பீட்டு பார்வை
எல்லாமே தொடுதலில் அடங்கியிருக்கிறது என்ற அடைமொழியுடன் நோக்கியா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நோக்கியா என்9 என்ற புதிய எஎம்ஒஎல்இடி தொடுதிரை வசதி கொண்ட மொபைலை அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் ஆர்ஐஎம் நிறுவனம் ப்ளாக்பெரி-9900 என்ற டிஎப்டி தொடுதிரையுடன் கூடிய புதிய மொபைலை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இரண்டு மொபைல்களுமே சில அம்சங்களில் மட்டுமே ஒத்துப் போகின்றன. இரண்டுமே அளவில்லாத போன்புக் மெமரி கொண்ட சேமிப்பு வசதியையும் தரமான ஸ்பீக்கர் கொண்ட 3.5எம்எம் ஜாக் ஆடியோ அவுட்புட்டையும் கொண்டுள்ளன.

ப்ளாக்பெரி 9900 க்யுடபுள்யுஇஆர்டிஒய் கீபோர்டை பெற்றிருக்கிறது. மேலும் தொடு கட்டுப்பாடு, ப்ராக்ஸிமிட்டியடைய ஆப்டிக்கல் ட்ராக் பேட் மற்றும் அக்ஸலமீட்டர் சென்சார்களையும் கொண்டுள்ளது. இதன் திரை 2.8 இன்ச் அளவுடன் 640 X 480 பிக்ஸல் ரிசலூசனையும் கொண்டிருக்கிறது.

ஆனால் நோக்கியா என்-9 ஸ்மார்ட்போன் 3.9 இன்ச் அளவுடைய திரையையும், 480 X 854 பிக்ஸல் துல்லியத்தில் வழங்கும் திறனையும் பெற்றிருக்கிறது. நோக்கியா என்-9ன் முக்கிய சிறப்பு, அதனுடைய பெரிய கண்ணாடி டிஸ்பளேயாகும். இது ப்ளாக்பெரியின் ட்ராக் பேட் டிஸ்பிளேக்கு சற்றும் குறைந்தது அல்ல. மேலும் நோக்கியா என்9 ஆன்டி க்ளேர் பொலாரைஸரையும் கொண்டுள்ளது.

ப்ளாக்பெரி-9900 போனின் தகவல் சேமிப்பு அமைப்பு ஜிபிஆர்எஸ் வசதியுடன் இடிஜிஇ தொழில்நுட்பத்துடன் 14.4எம்பிபிஎஸ் வேக அளவில் இயங்கக்கூடிய விரைவான 3ஜி நெட்வொர்க் வசதியையும் வழங்குகிறது. மேலும் வைபை மற்றும் வி2.1 ப்ளூடூத் தொடர்பையும் கொண்டுள்ளது. இரண்டு மொபைல்களும் சிறந்த ஸின்க்ரோனைசேஷன் செய்வதற்கான மைக்ரோ யுஎஸ்பி வி2.0 போர்ட்டை பெற்றுள்ளது.

நோக்கியா என்-9ஐ எடுத்துக் கொண்டால் அது கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸுடன் கூடிய 8எம்பி கேமராவைத் தருகிறது. மாறாக ப்ளாக்பெரி 2592 X 1944 பிக்ஸல் சப்போர்ட் கொண்ட 5எம்பி கேமராவைத் தருகிறது. என்-9 டூவல் எல்இடி ஃப்ளாஷையும், ப்ளாக்பெரி ஒரு எல்இடி ப்ளாஷையும் பெற்றிருக்கிறது.

மற்ற கேமரா வசதிகளான ஜியோ டேக்கிங் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைஸிங் அகியவை இரண்டு பொபைல்களிலும் உள்ளன. மேலும் நோக்கியா என்-9 வீடியோ விளையாட்டுகளான ஆங்கிரி பேர்ட்ஸ் மேஜிக், காலக்ஸி ஃபயர்2, ரியல் கோல்ஃப் 2011 போன்றவற்றை வழங்குகின்றன. ஆனால் ப்ளாக்பெரி தொழில் சம்பந்தப்பட்ட பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

மென்பொருள் வசதிகளைப் பொறுத்த மட்டில் ப்ளாக்பெரி மிகவும் நேர்த்தியாக உள்ளது. நிறைந்த ஜாவா வசதி, வேர்ட், எக்ஸல், மற்றும் பவர் பாயின்ட் போன்ற ஏரானமான மென்பொருள் வசதிகளை ப்ளாக்பெரி வழங்குகிறது. நோக்கியா என்-9 எஸ்என்எஸ் மற்றும் சத்தத்தைத் தவிர்க்க சென்சார் மைக்ரோபோன் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் டிவி அவுட், டிஜிட்டல் கம்பாஸ், பிடிஎஃப் வீயுவர் மற்றும் 5 மணி நேரம் இயங்கக்கூடிய இசை ஆகியவற்றையும் வழங்குகிறது.

ப்ளாக்பெரி வரும் செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஆனால் நோக்கியாவின் என்-9 இந்த ஆண்டு இறுதியில் ரூ.35,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X