ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் அசத்த வரும் மோட்டோ மொபைல்

ரேஸர் டிராய்டு போனில் 4.30 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மல்டி டச், பிராக்ஸிமிட்டி சென்ஸார் போன்ற வசதிகள் கொண்ட மொபைல் இது. இந்த போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இந்த மொபைலில் டியூவல் கோர் 1,200 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 1024 எம்பி ரேம் வசதியும் உள்ளது. துல்லியமான புகைப்படம் எடுக்க இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா உதவுகிறது. இந்த கேமரா மிகவும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டடு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ், வைபை, புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகளை வாரி வழங்குகின்றது. இதில் 3ஜி மற்றும் 4ஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேஸர் மொபைலில் 3.5 மிமீ ஸ்டீரியோ ஹெட்செட் ஜேக் உள்ளது.
இந்த மொபைலில் ஆன்ட்ராய்டு வெர்ஷனான ஐஸ்கிரீம் சேன்வெட்ஜ் தொழில் நுட்பத்தையும் அப்கிரேட் செய்து கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்களுக்கு இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. நீண்ட நேரம் பேச்சை தொடர்வதற்கு எல்ஐ-அயான் ஸ்டான்டர்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இத்தகைய வசதி கொண்ட மொபைல் இந்த வருடத்தின் கடைசியில் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகி்றது. இந்த மோட்டோரோலா டிராய்டு மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications