விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய ஏசர் ஸ்மார்ட்போன்

அந்த வகையில் அலிக்ரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது ஏசர் நிறுவனம். இதில் விண்டோஸ் டபிள்யூபி 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. இது விண்டோஸின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தொழில் நுட்பம் கொண்ட அலிக்ரோ மொபைல், ஏசர் என்இஓ டச் மொபைல் விற்பனைக்கு வந்த பின்பு வெளிவரும்.
இது 3.7 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அலிக்ரோ மொபைல் எல்சிடி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. 480 X 800 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது. 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது.
இதில் 1ஜிஎச்இசட் ஸ்னாப் டிராகன் பிராசஸரும் மற்றும் அட்ரினோ 205 ஜிபியூ பொருத்தப்பட்டுள்ளது. இதில் 512 எம்பி ரேம் கெப்பாசிட்டி உள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா 720பி துல்லியத்தைக் கொடுக்கிறது. அற்புதமான வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் பெற முடியும்.
புளூடூத், மைக்ரோ யூஎஸ்பி, வைபை போன்ற பயன்பாடுகளும் இதில் உண்டு. இந்த போனில் 3ஜி வசதி கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏசர் அலிக்ரோ என்ற அழகிய ஸ்மார்ட் மொபைல் ரூ.15,800 விலையில் கிடைக்கலாம் என்றும், நவம்பர் மாதம் வெளிவரக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications