கனவுல கூட நினைக்கல.. 150W சார்ஜிங் உடன் வரும் இந்த OnePlus போன் விலை இவ்ளோ குறைக்க படும்னு!
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக (ஏப்ரல் 4) இருக்கும் நிலைப்பாட்டில், இந்நிறுவனம் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருமொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மீது நம்ப முடியாத விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
நாம் இங்கே பேசுவது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சுவாரசியமாக இது, இந்த ஸ்மார்ட்போனின் மீது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது விலைக்குறைப்பாகும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 10ஆர்-ன் விலை ரூ.4,000 குறைக்கப்பட்டது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு மேலும் ரூ.3,000 விலைக்குறைப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் அசல் விலையில் இருந்து மொத்தம் ரூ.7000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் போனின் அசல் விலை என்ன? விலைகுறைப்பிற்கு பின்னர் இருக்கும் புதிய விலை என்ன? இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ விவரங்கள்:
பழைய விலை VS புதிய விலை: ஒன்பிளஸ் 10ஆர் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமானது: 8ஜிபி + 128ஜிபி (80W ஃபாஸ்ட் சார்ஜிங்), 12ஜிபி + 256ஜிபி (80W ஃபாஸ்ட் சார்ஜிங்) மற்றும் 12ஜிபி + 256ஜிபி (150W ஃபாஸ்ட் சார்ஜிங்). இவைகள் முறையே ரூ.38,999, ரூ.42,999 மற்றும் ரூ.43,999 அறிமுகமாகின.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முதல் விலைக்குறைப்புக்கு பிறகு, மேற்குறிப்பிட்டுள்ள 3 ஸ்டோரேஜ் ஆப்ஷனைகளின் விலைகள் முறையே ரூ.34,999, ரூ.38,999 மற்றும் ரூ.39,999 ஆக குறைந்தது. இப்போது இரண்டாவது விலைக்குறைப்புக்கு பிறகு, அதே ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.31,999, ரூ.35,999 மற்றும் ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கின்றன.
முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ ஃப்லூயிட் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 150W சூப்பர்வூக் எண்டூரன்ஸ் எடிஷனாக வருகிறது மற்ற 2 ஆப்ஷன்களும் 80W சூப்பர்வூக் சப்போர்ட் உடன் வருகிறது.
80W சப்போர்ட் உடன் வரும் மாடல்களில் 5,000mAh பேட்டரி உள்ளது; மறுகையில் உள்ள 150W சப்போர்ட்-ஐ கொண்ட மாடலில் 4500mAh பேட்டரி உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது, முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது.
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி நிறைகள் மற்றும் குறைகள்: நிறைகளை பொறுத்தவரை இதன் 10-பிட் HDR10+ டிஸ்ப்ளே, 120ஹெர்ட்ஸ் AMOLED பேனல், சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ், 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 9 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவு, திடமான பேட்டரி லைஃப் போன்றவைகளை கூறலாம்.
குறைகளை பொறுத்தவரை இது பிளாஸ்டிக் பேக் பேனலையே கொண்டுள்ளது; இதன் செல்பீ கேமரா இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்; ரியர் கேமரா செட்டப்பில் எடுக்கப்படும் இரவு நேர புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை; இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லை; மேலும் இதில் எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இல்லை!


Click it and Unblock the Notifications








