புதிதாக ஒரு போனை வாங்கும் போது நாம் செய்யும் குறும்பான சில காரியங்கள்
துணி மாற்றுவதை போல் பயன்படுத்தும் மொபைல்களையும் நாம் மாற்றிக்கொண்டு தான் இருக்கின்றோம். ஒவ்வொரு போனை மாற்றும் போதும் இந்த நடவடிக்கைகளை நீங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். அப்படி என்ன தான் செய்கிறீர்கள் என்று பார்ப்போமா

#1
பழைய போனை பார்த்தாலே கோபம் கோபமாக வரும், இந்த போனை ஏன் தான் நாம் வாங்கினோம் என்று யோசிப்பீர்கள்

#2
இணையதளத்தில் புது வரவு போன்களை வாழ்க்கை துணையை தேடுவதை போல் தேடுவீர்கள்

#3
நண்பர்கள் பயன்படுத்தும் போன்களை பற்றி விசாரிப்பதோடு, அவர்களும் உங்களை போல் அவர்களின் போனை பற்றி பெறுமையாகவே கூறுவர்

#4
கேட்கும் அனைத்து மாடல் போன்களும் சந்தையில் கிடைக்கும் சிறந்த போனாகவே தெரியும், உண்மையில் அது நாம் ஏற்கனவே வைத்திருந்த போனை விட இரு விணாடிகள் தான் வேகமாக செயல்படும்

#5
சந்தையில் சிறந்த போனை பார்த்தாலும் அதன் விலை நீங்கள் வாங்க முடியாத அளவு விலை அதிகமாக இருக்கும்

#6
வேறு வழியில்லாமல் பிடித்த விலை உயர்ந்த போனை வாங்காமல் குறைந்த விலையில் வேறு ஒரு போனை வாங்க சமாதானம் செய்து கொள்வீர்கள்

#7
நாம் தேர்வு செய்த போனின் விமர்சனங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்வோம்

#8
யு டியூபில் குறைந்தது 100 போன் விமர்சன வீடியோக்களை பார்த்து நாம் தேர்தெடுத்த போனை பார்த்து வியப்போம்

#9
பொறுமையிழந்தவர் என்றால் நேரடியாக கடைக்கே சென்றும், பொறுமையாக இருப்பவர் என்றால் ப்ளிப்கார்ட் அல்லது அமேசான் மூலமாகவும் போனை வாங்குவோம்

#10
போனின் அட்டையை பிரித்து குறைந்தது 2 மணி நேரமாவுது போனை வியப்பாக பார்த்து கொண்டிருப்போம்

#11
ஒரு நாள் முழுக்க வாங்கிய ஸ்மார்ட் போனின் செட்டிங்ஸை பார்த்து கொண்டு இருப்போம்

#12
போன் வாங்கிய சில நாட்கள் போனை சற்று நேரம் கூட கீழே வைக்க மாட்டோம், பழைய போனை நினைத்து கொண்டு புதிய போனை பத்திரமாக பார்த்து கொள்வோம்

#13
வாங்கிய போனை அனைவரிடமும் திரும்ப திரும்ப காட்டிக்கொண்டே இருப்பீர்கள்

#14
இரண்டு மாதம் கழித்து புதிய போனும் போரடித்து விடும் உங்களுக்கு, அதை இப்பொழுது டென்னிஸ் பால் போன்று பயன்படுத்துவீர்கள்

#15
திரும்பவும் வாங்கிய புதிய போனை ஏன் நாம் வாங்கினோம் என்று புலம்பி கொண்டிருப்பீர்கள்


Click it and Unblock the Notifications