மிரளுது விற்பனை.. ரூ.25000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன், 16 ஜிபி ரேம், 64 எம்பி மெயின் கேமரா, ஆல்-ரவுண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேக் பேனலில் பிரீமியம் லுக் கொடுக்கும் ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO F27 Pro+ Plus 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட கிடைக்கிறது. இந்த ஓப்போ போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன.
ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO F27 Pro+ Plus 5G Specifications): இந்த ஓப்போவில் 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curverd AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1.7 பில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொண்டிருக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. 7.53 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கிடைக்கிறது.
இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப் வருகிறது. ஓப்போவின் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மட்டுமல்லாமல், மீடியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் ஆட்டோபோகஸ் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. பிக்சட் போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் வியூ வீடியோ, போர்ட்ராய்டு, பானோ, நைட், எக்ஸ்ட்ரா எச்டி மற்றும் ப்ரோ போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.
8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த ஓப்போவில் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. IP69, IP68 மற்றும் IP66 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் 5000mAh வருகிறது. இந்த பேட்டரிக்கும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. மிட்நைட் நேவி (Midnight Navy) மற்றும் டஸ்க் பிங்க் (Dusk Pink) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் கொண்டிருக்கிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் விற்பனையில் ரூ.2,799 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎம்பி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.25,200 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications