Home
Mobile

யாரு விடுவா? ரூ.12999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்29 5ஜி (Vivo Y29 5G) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. 5000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் வாங்கிவிட முடியும்.

யாரு விடுவா? ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்29 5ஜி அம்சங்கள் (Vivo Y29 5G specifications): 6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் விவோ ஒய்29 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு FunTouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இந்த விவோ போனின் எடை 198 கிராம் ஆகும்.

5500mAh பேட்டரி உடன் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, டூயல் சிம், வைஃபை, புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue), டைட்டானியம் கோல்டு (Titanium Gold), டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on vivo Y29 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X