பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், சோனி சென்சார் கேமரா, ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் வெளியாகிய விவோ வி30இ 5ஜி (Vivo V30e 5G) போனானது, மிரளவிடும் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அமோலெட் பேனல், விர்ச்சுவல் ரேம், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப் போன்ற மற்ற பீச்சர்களிலும் பிரீமியமாக இருக்கிறது. இந்த விவோ வி30இ போனின் விலை, பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
விவோ வி30இ விலை (Vivo V30e Price): இந்த விவோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் (Flipkart) ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த விவோ வி30இ போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலை ரூ.25,499 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம்.
வெல்வெட் ரெட் (Velvet Red) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் அல்ட்ரா ஸ்லிம் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி போர்ட்ராய்டு கேமரா, ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர், 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்கள் மற்றும் 5500mAh பேட்டரியுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கிறது.
விவோ வி30இ அம்சங்கள் (Vivo V30e Specifications): ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. விவோவின் லேட்டஸ்ட் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. இந்த விவோவில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் வெல்வெட் ரெட் மாடலானது, 7.65 மிமீ தடிமனும், சில்க் ப்ளூ மாடலானது, 7.75 மிமீ தடிமனும் கொண்டிருக்கிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் இந்த போனை எதிர்பார்க்கலாம்.

இதற்கு ஏற்ப 6.78 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த விவோ வி30இ போனில் 50 எம்பி ஐ ஆட்டோ போகஸ் (Eye Auto Focus) செல்பீ ஷூட்டர் வருகிறது. ஓஐஎஸ் (OIS) மற்றும் ஆட்டோபேகஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 Sensor) வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் ஆரா லைட் கொண்டிருக்கிறது.
மெயின் மற்றும் செல்பீ ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. ஸ்மார்ட் கலர் டெம்பரேச்சர் அட்ஜெஸ்ட்மண்ட்ஸ், 2X போர்ட்ராய்டு மோட் வருகிறது. விலாக் மூவி கிரியேட்டர், போர்ட்ராய்டு, நைட் போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த விவோவி மாடலில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications