Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் பக்காவான டிஸ்கவுண்ட் பெற்று கம்மியான விலைக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 16ஜிபி ரேம், 44W பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் விவோ வி29இ (Vivo V29e) போன் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

விவோ வி29இ அம்சங்கள் (Vivo V29e Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. எந்த போன்?

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ மாடலில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED ) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு கலர் சேஞ்சிங் பேக் பேனல் கொண்டிருக்கிறது. இந்த போனில் பக்காவான டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

மிரளுது டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. எந்த போன்?

இந்த மெயின் கேமராவில் டூயல் வீயூ, சூப்பர் மூன், ஸ்லோவ் மோஷன், மைக்ரோ மூவிஸ லைட் எஃபெக்ட் போன்ற பல்வேறு மோட்கள் வருகின்றன. அதேபோல 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் நைட், போர்ட்ராய்டு, மேக்ரோ மூவி, லைவ் போட்டோ போன்ற மோட்கள் வருகின்றன.

இந்த விவோ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது. அதேபோல டைப் - சி ஆடியோ மற்றும் ஓடிஜி (OTG) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த விவோ வி29இ போனில் கிளாஸ் பேக் பேனலுடன் ஆர்டிஸ்டிக் ப்ளூ (Artistic Blue) மற்றும் ஆர்டிஸ்டிக் ரெட் (Artistic Red) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. இந்த போனின் கனெக்விடிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.1 , வை-பை 6, ஜிபிஎஸ் (GPS), டூயல் 4ஜி மற்றும் 5ஜி எஸ்ஏ ஆகியவை வருகின்றன.

மிரளுது டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. எந்த போன்?

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 26,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் ரூ.28,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த போனை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு (SBI Bank Credit) பயன்படுத்தி வாங்கினால், முழுதாக ரூ.2,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலை ரூ.26,499க்கும், 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.24,499க்கும் வாங்கிக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Vivo V29e 5G With Snapdragon 695 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X