Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.20,499 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட விவோ டி4 5ஜி (Vivo T4 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்3 சிப்செட் கொண்ட இந்த விவோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி4 5ஜி பிளிப்கார்ட் சேல் (Vivo T4 5G Flipkart Sale): இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.20,499 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. மாடல்?

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1,500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ ஆஃபரை பெற்று கொள்ளலாம். அதேபோல ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த விவோ டி4 5டி போனை ரூ.20,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை இந்த போன் கொடுக்கிறது. அதேபோல இந்த மாடலுக்கு 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி பேட்ச்களும் கிடைக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா மற்றும் சிப்செட் பீச்சர்களிலும் மிட்-ரேஞ்ச் காட்டி இருக்கிறது.

முன்பே சொன்னதை போல 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு அதிகப்படியான பேக்கப் கொடுக்கும்படியான மாடலாக இந்த விவோ டி4 5ஜி இருக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் மட்டுமே இருந்தாலும், நைட்போட்டோகிராபிக்காக ஆரா லைட் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.20,499 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. மாடல்?

இதற்கு ஏற்ப சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயினி கேமராவும், செகண்டரிக்காக 2 எம்பி டெப்த் கேமராவும் கிடைக்கிறது. இந்த கேமரா மூலம் 4K 3FPS வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். இந்த விவோ டி4 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே கிடைக்கிறது.

ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் கர்வ் டிசைன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.

அதே நேரத்தில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டிலும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

ஆனால், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், IP65 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மட்டும்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும் MIL-STD-810H சர்டிபிகேஷனை கொடுக்கிறது. பாண்டம் கிரே அல்லது எம்ரால்டு பிளேஸ் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Vivo T4 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X