அடிச்சு தூக்குது ஆர்டர்.. மட்ட ரேட்ல POVA 5G போன்.. 3டி டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பை பை 2025 (Buy Buy 2025) என்னும் சிறப்பு விற்பனையில் அடிமட்ட விலைக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இதில் டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) ஸ்மார்ட்போன் 64 எம்பி கேமரா, 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மலிவாக வாங்க கிடைக்கிறது. இந்த போவா கர்வ் 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரையில் நடக்கும் இந்த விற்பனையில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 15 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,199 பட்ஜெட்டில் இந்த போவா கர்வ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிசைன் கிடைப்பதால், பிரீமியமான பாதுகாப்பு கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் அவுட்புட் மட்டுமல்லாமல், பாதுகாப்பையும் எதிர்பார்க்க முடிகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. மேலும், 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்டை பெற்று கொள்ளலாம். 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனில் மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது. சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களில் பேட்டரி கேபாசிட்டி பெரிதாக இருக்காது. ஆனால், இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5500mAh பேட்டரி கொடுக்கப்படுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போக டூயல் மைக்ரோபோன்களை கொடுக்கிறது. பிரீமியம் டிசைன் விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ப நியான் சியன் (Neon Cyan), மேஜிக் சில்வர் (Magic Silver) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது. ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்ஸர் (AI Auto Answer) மற்றும் எல்லா ஏஐ (Ella AI) போன்ற பீச்சர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








