வெளுக்குது விற்பனை.. ரூ.3000 கட்.. ரூ.19999 போதும்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
கேமரா பிரியர்களை அறக்க பறக்க விடும்படியான பட்ஜெட்டில் சூப்பர் நைட் போட்டோகிராபி, ஏஐஜிசி போர்ட்ராய்டு மெயின் கேமரா, கலர் டெம்பரேச்சர் செல்பீ ஷூட்டர் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 70W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் டெக்னோ கேமன் 30 5ஜி விற்பனைக்கு வந்துள்ளது.
டெக்னோ கேமன் 30 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 5G Specifications): இந்த போனில் அல்ட்ரா கிளியர் இமேஜிங் (Ultra Clear Imaging) சப்போர்ட் கொண்ட் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Potrait), 100 எம்பி ஓஐஎஸ் அல்ட்ரா கிளியர் மோட், சூப்பர் நைட் போட்டோகிராபி மோட் (Super Night Photograpy Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. மேலும், 10X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
50 எம்பி ஆட்டோபோகஸ் (Auto Focus) செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) சப்போர்ட் வருகிறது. வீடியோ எச்டிஆர் (Video HDR) கொண்டிருக்கிறது. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட் மாடலாக இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.
டிஸ்பிளே பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது. 6.78 இன்ச் எல்டிபிஎஸ் அமோலெட் (LTPS AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டாட்-இன் டிஸ்பிளே (Dot-in Display) மாடலாகும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1.07 பில்லியன் கலர் டெப்த் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
அல்ட்ரா 5ஜி பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக பிரத்யேகமாக ஹைப்பர்என்ஜின் 5.0 (HyperEngine 5.0) என்னும் கேமிங் என்ஜின் வருகிறது.
டெக்னோவின் ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது. 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படுகிறது. இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் பட்டையை கிளப்பும் பேட்டரி சிஸ்டம் வருகிறது. 70W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. 7.8 மிமீ ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. அலுமினியம் அலாய் சர்குளர் கேமரா (Aluminium Alloy Circular Camera) மற்றும் சைடு-ஆக்சிஸ் டிசைன் (Side-Axis Design) பிரீமியம் லுக் கொடுக்கிறது. மார்பெல் டெக்ச்சர் கிளாஸ் பேக் பேனல் வருகிறது.
இந்த டிசைனில் பாலஸ்டிக் டார்க் (Balastic Dark) மற்றும் யுயுனி சால்ட் ஒயிட் (Uyuni Salt White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டெக்னோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது.
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐயில் வாங்கினால், ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








