அமேசான் அதிரும்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதன்படி அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Specifications): 6.5-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி. பின்பு இதன் டிஸ்பிளேவில 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த சாம்சங் 5ஜி போன் வெளிவந்துள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
அதேபோல் இந்த சாம்சங் போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








