புதுசு வருது.. மட்ட ரேட்ல பழசு.. 6000mAh பேட்டரி Samsung 5G ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,430 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலையில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.0 (One UI 8.0) பேக் செய்கிறது.
பட்ஜெட் மாடலாக இருந்தாலும், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 10x ஜூமிங் மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.2 எம்எம் தடிமன் உள்ளது.
199 கிராம் எடை கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
லைம்லைட் கிரீன் (Limelight Green), ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) கலர்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் உள்ளது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொடுக்கிறது.
இதிலும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. ரூ.25,999 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது.


Click it and Unblock the Notifications