பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.3000 ரேட் கட்ல 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே!
1.5K ரெசொலூஷன் கொண்ட குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 80W அல்ட்ரா சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, சோனி ஐம்எக்ஸ்896 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, அண்டர் வாட்டர் கேமரா அவுட்புட் கொண்ட IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களையும் பட்ஜெட்டில் கொடுத்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆரம்பமே ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைப்பதால் விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளது.

இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ, ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் 1 வருட கூடுதல் வாரண்டி கிடைக்கிறது. 14 ஜிபி விர்ச்சுவல் ரேம், விசி கூலிங் சிஸ்டம், அண்டர் வாட்டர் போட்டோகிராபி, வேகன் லெதர் பேனல் போன்ற ஒட்டுமொத்த பாடியிலும் பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனின் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Realme P3 Ultra 5G Specifications): இந்த ரியல்மி போனில் 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
இதுபோக, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் போன்களில் எதிர்பார்க்கும்படியான அவுட்புட் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனிலும் கிடைக்கிறது. இந்த ப்ரீமியம் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. 14 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.
ஆகவே, 12 ஜிபி ரேம் + 14 ஜிபி விர்ச்சுவல் ரேம் பயன்படுத்தலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் 2 மீட்டர்கள் ஆழம் வரையில் 30 நிமிடங்களுக்கு இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி தாக்குப்பிடிக்கும். மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, ஹாட்வாட்டர், ஹெவி ரெயின் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இதன் மூலம், டிஸ்பிளே மற்றும் பாடியில் பிரீமியம் குவாலிட்டி கொடுக்கிறது. டிசைனும் அப்படித்தான் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் குளோவிங் லூனார் ஒயிட் (Glowing Lunar White), நெப்ட்டியூன் ப்ளூ (Neptune Blue) மற்றும் ஓரியன் ரெட் (Orion Red) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இதில் குளோவிங் லூனார் ஒயிட் மாடலின் பேக் பேனலில் மின்னக்கூடிய மெட்டீரியல் வருகிறது.
ஆகவே, லோவ்-லைட் நேரங்களில் கிரீன் ஹாளோ குளோவிங் கிடைக்கும். அதேபோல டார்க்-லூனார் டிசைன் பேனலில் இடம்பெற்றிருக்கும். மற்ற நெப்ட்டியூன் ப்ளூ மற்றும் ஓரியன் ரெட் மாடல்களில் பிரீமியம் வேகன் லெதர் பேனல் கிடைக்கிறது. இந்த லெதர் பேனல் இருந்தும் 7.47 மிமீ தடிமன் மட்டுமே இருக்கிறது. அதுவே குளோவிங் லூனார் ஒயிட் வெறும் 7.38 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது.
அதோடு 183 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால், இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W சார்ஜிங் கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1.8 மணி நேரங்களுக்கு கேமிங் அவுட்புட் கொடுக்கும். பேட்டரி ஹீட், ஓவர் சார்ஜிங் கன்ட்ரோல்களுக்கு கூடுதல் பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் (AI Smart Charging) மற்றும் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. 47 நிமிடங்களில் 1-100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இப்போது பர்ஃபாமென்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் பிரீமியமான ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 அல்ட்ரா 4என்எம் (Octa Core Dimensity 8350 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது.
இது சிப்செட் கொண்ட முதல் மாடலாக ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி இருக்கிறது. இந்த சிப்செட்டுடன் மாலி ஜி614 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஜிடி பூஸ்ட் (GT BOOST), 90FPS பிஜிஎம்ஐ கேம்பிளே போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன.
இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாரும், செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாரும் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொடுக்கிறது.
இதுபோக 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. கேமரவுக்கு பிரத்யேக ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ லைவ் போட்டோ (AI Live Photo), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face) மற்றும் ஏஐ மோஷன் டீபிளர் (AI Motion Deblur) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற எக்கச்சக்க பீச்சர்களை இந்த போன் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








