Home
Mobile

விட்ராதீங்க சார்.. லிமிடெட் சேலில் ரூ.14,249-க்கு 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அடிமட்ட விலையில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) போனுக்கு லிமிடெட் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் மேலும் கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் மார்ச் 19ஆம் தேதி இந்த ரியல்மி பி3 5ஜி போன் வெளியாகியது. வரும் மார்ச் 26ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் லிமிடெட் பீரியட் விற்பனையில் (Flipkart Limited Period Sale) டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, இன்று 4 மணிக்குள் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

விட்ராதீங்க சார்.. லிமிடெட் சேலில் ரூ.14,249-க்கு 6000mAh பேட்டரி!

இதில் ரூ.16,999 விலை கொண்ட 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.2,150 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல விலை, ரூ.17,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.2,160 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.19,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 2,180 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல டெபிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால், ரூ.14,249 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். இந்த போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

ரியல்மி பி3 5ஜி அம்சங்கள் (Realme P3 5G Specifications): இந்த போனில் 6.67 இன்ச் (1080 x 2400) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் குளோவ் டச் (Glove Touch Control) மற்றும் ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) கிடைக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட் பேக் செய்துள்ளது. மேலும், ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சப்போர்ட் கிடைக்கிறது. பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி போன் கொடுக்கிறது.

இந்த ரியல்மி பி3 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. முன்பக்கம் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கிறது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வரவேற்கும்படி இருக்கிறது.

Take a Poll

பேட்டரி சிஸ்டம் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி இருக்கிறது. அதாவது, கேமிங் பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரியையும் அதற்கு ஏற்ப 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கொடுக்கப்படுட்டுள்ளது. ஸ்பேஸ் சில்வர், காமட் கிரே அல்லது நெபுலா பிங்க் ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Realme P3 5G in Flipkart Limited Period Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X