யாரு சாமி அவன்.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5200mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (realme P2 Pro 5G) போன் விற்பனைக்கு வந்து இருக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி கேமரா, டால்பி அட்மோஸ், 80W ஃபாஸ் சார்ஜிங், 5200mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் வருகின்றன. கிரிஸ்டன் டெகோ மற்றும் பயோவிஷன் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி பி2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (realme P2 Pro 5G Specifications): இந்த ரியல்மி மாடலானது கேமிங் பிரியர்களுக்கான ஆல்-ரவுண்டர் பீச்சர்களை கொடுக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் கிராபிக்ஸ் கார்டில் பட்ஜெட்டைவிட கூடுதலாக பேக் செய்துள்ளது. 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் P3 கலர் காமட் கிடைக்கிறது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கான ஃபாஸ்ட் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உள்ளது. ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனில் 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. 12 ஜிபி மாடலில் 12ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் உள்ளது.

கேமிங் பிரியர்களுக்கான விசி கூலிங் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. ஜிடி கேம் (GT Game) சப்போர்ட் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LTY 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
இந்த கேமராவிலும் சோனி சென்சார் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) வருகிறது. IP65 ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனில் பேரட் கிரீன் (Parrot Green) மற்றும் ஈகில் கிரோ (Eagle Grey) கலர்களில் கிடைக்கிறது.
ரியல்மி பி2 ப்ரோ 5ஜி விற்பனை (realme P2 Pro 5G Sale): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) மல்டிபிள் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரூ.8,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications