வெளுக்குது விற்பனை.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட்டில் பிரியர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் பிரியர்களையும் தட்டித்தூக்கிய ரியல்மி சி63 (Realme C63) போனானது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. எச்டிபிளஸ் டிஸ்பிளே, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட், ஏஐ நாய்ஸ் கால் ரெடக்சன், 50 எம்பி கேமரா போன்ற பட்ஜெட்டைவிட கூடுதலான பீச்சர்களுடன் இந்த ரியல்மி போன் கிடைக்கிறது. இந்த சி63 மாடலின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி சி63 அம்சங்கள் (Realme C63 Specifications): அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் மொபைலுக்கு இந்த சி63 பக்கா மாடலாகும். ஏனென்றால், 7.74 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேக் கொண்டிருக்கிறது. ஆகவே, பிரீமியம் போன்களில் கிடைக்கும் ஹேண்டி கம்போர்ட் எதிர்பார்க்கலாம். 2 எடையில் கிடைக்கிறது.

லெதர் பேன் கொண்ட லெதர் ப்ளூ (Leather Blue) மாடலானது, 191 கிராம் எடையும், ஜேட் கிரீன் (Jade Green) 189 கிராம் எடையும் வருகிறது. ரியல்மி யுஐ (realme UI) மற்றும் இந்த பட்ஜெட்டில் கிடைக்காத லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. பட்ஜெட் செக்மெண்டில் கிடைக்கும் ஆக்டாகோர் யுனிசாக் டி612 எஸ்ஓசி (Octa-core Unisoc T612 SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி சி63 போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comfort Display) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. டிஸ்பிளே பக்காவாகவே இருக்கிறது.
45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி சிஸ்டம் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்டில் 45W சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த போன் இருக்கிறது. மேலும், ஸ்மார்ட் சார்ஜ் டெக்னாலஜி (Smart Charge Technology) வருகிறது. இந்த ரியல்மி சி63 போனில் ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) சப்போர்ட் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல்) + 128ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட்கள் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களிலும் மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது. ஆகவே, இந்த மாடல்களில் 2 டிபிக்கான எஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஏஐ பீச்சர்களும் இருக்கின்றன. ஆகவே, ஏஐ நாய்ஸ் ரெடக்சன் கால் (AI Noise Reduction Call) மற்றும் ஏஐ பூஸ்ட் (AI Boost) சப்போர்ட் உள்ளது. 50 எம்பி ஏஐ மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ரியல்மி போன்களில் கிடைக்கும் கேமரா பீச்சர்கள் பேக் செய்துள்ளது.
ரியல்மி சி63 பிளிப்கார்ட் விற்பனை (Realme C63 Flipkart Sale): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.9,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் வி்ற்பனைக்கு வந்துள்ளது. ரூ.7,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications