அப்படி போடு.. 108MP கேமரா.. 128ஜிபி மெமரி.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 108எம்பி ரியர் கேமரா, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) நிறம் கொண்ட ரியல்மி 12 5ஜி போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் உடன் தள்ளுபடியும் உள்ளது.

எனவே இந்த இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போனை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்கள இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (realme 12 5G Specifications): 6.72-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2400 × 1080 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், போன்ற பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ்(Dimensity 6100+) பிராசஸர் வசதியுடன் ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. அதேபோல் இதில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 5ஜி ஸ்மாார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner),, ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் போன்ற வசதிகள் இந்த ரியல்மி போனில் உள்ளது. மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட், வைஃபை 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








