வெளுத்துக்கட்டுது ஆர்டர்.. ரூ.16,149 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 2டிபி மெமரி, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ரியல்மி 12 5ஜி (Realme 12 5G) போனானது, நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது.
ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (Realme 12 5G Specifications): இந்த ரியல்மியில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. பிளாட் எட்ஜ் டிசைனில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் (Dynamic Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த ரியல்மி போனில் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோக 2 டிபிக்கானா மைக்ரோஎஸ்டி (microSD) வருகிறது.
ஆகவே, இந்த ரியல்மி மாடலில் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (microSD Slot) வருகிறது. சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி ரியர் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இந்த கேமராவில் 3எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் (3x Lossless Zoom) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல நைட் மோட் (Night Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), ப்ரோ மோட் (Pro Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஹை-ரெஸ் மோட் (Hi-Res Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.
மேலும், டில்ட்-ஷிப்ட் (Tilt-shift), மூவி மோட் (Movie Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video), குரூப் போர்ட்ராய்டு (Group Portrait) போன்ற பீச்சர்களும் வருகின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி 12 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. 7.69 எம்எம் தடிமன் மற்றும் 188 கிராம் எடை கொண்டிருக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வுட்லேண்ட் கிரீன் (Woodland Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 16,999ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் 6 ஜிபி மாடலுக்கு ரூ.850 மற்றும் 8 ஜிபி மாடலுக்கு ரூ.900 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதை பிளிப்கார்டு ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றலாம். ஆகவே, 6ஜிபி மாடலை ரூ.16,149க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








